emoji - 2026

என்ன இது..? புதிய எமோஜியால் iOS 15.4 பயனர்கள் குழப்பம்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
emoji - 2026

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்கள் ஊடாக நண்பர்கள் அரட்டை (Chat) அடிக்கும் போது பெரும்பாலும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களைக் கொண்டு சண்டை செய்வதும் வழக்கம்.

இத்தகைய சூழலில் கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் iOS 15.4 அப்டேட்டை தங்களது பயனர்களுக்கு அறிமுகம் செய்திருந்தது. அந்த அப்டேட்டில் பயனர்களுக்கு புதிதாக 37 எமோஜிகளை அறிமுகம் செய்திருந்தது.

ஐபோன் 6s மற்றும் அதற்கும் மேற்பட்ட மாடல்களை கொண்டுள்ள பயனர்கள் இந்த அப்டேட்டை பெறலாம். இத்தகைய சூழலில் இந்த அப்டேட்டை தங்கள் போனில் மேற்கொண்ட பயனர்கள் சிலர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எமோஜிக்களில் ஒன்றை பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆண்மகன் ஒருவர் உப்பிய வயிற்றுடன் நிற்பது அந்த 37 எமோஜிக்களில் ஒன்று. அதை பார்த்து தான் பயனர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதாவது சில பயனர்கள் ஆண் ஒருவர் Pregnant-ஆக இருப்பதாகவும் சிலர் அது வெறும் உப்பிய வயிறு தான் எனவும் சொல்லி ட்வீட் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.