நீ அம்மா வீட்டுக்கு தானே போன நான் உலகத்தை விட்டே போறேன்.. கணவன் எடுத்த விபரீத முடிவு!

கிரைம் நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
marrige - 2026

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீடு செல்ல, அந்த சோகத்தில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்(45). இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சந்தோஷமாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் 3 மாதத்திலேயே சிறிது தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டதால் சிவக்குமார் மனஉளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் சிவகுமார் இருந்த அறை உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.

thukku1 1 - 2026

இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை அக்கம், பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிவகுமார் அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஈரோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.