30 ஆயிரம் கோடி வருமானத்திற்கு வேறு வழி இருந்தா பாருங்க..! தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் ராஜன் ஆதங்கம்!

உள்ளூர் செய்திகள் சினிமா சென்னை பொது தகவல்கள்
k rajan - 2026

தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள் என தயாரிப்பாளர் கே.ராஜன் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

ராஜன் மலைச்சாமி இயக்கத்தில் புதுமுகங்களால் இணைந்து உருவாக்கியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இத்திரைப்படத்தில் அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

k rajan 3 - 2026

விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், “தமிழக அரசின் காலில் விழுந்து கேட்கிறேன். தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிடுங்கள். 30 ஆயிரம் கோடி வருமானத்திற்கு வேறு ஏதாவது வழி பாருங்கள். தாலிக்கு தங்கத்தை நீங்களே கொடுத்துவிட்டு அந்த தாலியை நீங்களே அறுக்காதீர்கள்.

k rajan 2 - 2026

மறைந்த முதலமைச்சர் காமராஜ் டாஸ்மாக் வருமானத்தை நம்பியா அரசை நடத்தினார். இன்று 30 சதவீத பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்” என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.