மூங்தால் வெஜிடபிள் தோசை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
paasiparuppu - 2026

மூங்தால் வெஜிடபிள் தோசை

தேவையான பொருட்கள் :

மூங்தால் (பாசிப்பருப்பு) – 2 கப்,
ரவை – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
காய்ந்த மிளகாய் – 4,
சீரகம் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையானவை

வெஜிடபிள் செய்ய தேவையானவை :

vegitable - 2026

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,
பச்சை பட்டாணி நறுக்கியது வகைக்கு – 1 கப்,
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவையானது,
துருவிய சீஸ் – சிறிதளவு,
கடுகு, சீரகம் – தாளிப்பதற்கு

செய்முறை :

வெங்காயம், காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு, துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும்.

pasiparuppu dhosai - 2026

தோசை செய்முறை :

பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

அதில் ரவையைக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.