சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றினால்… ரூ.100 அபராதம்! 14 நாள் தனிமை! எச்சரிக்கை மக்களே!

Published:

Chief Secretariat
Chief Secretariat

சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சிறப்பு பயண பாஸ் முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

“வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்” என்றும், “ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களும் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்; தனிமைப் படுத்தப் படுவதற்கான ஸ்டிக்கரை வீடுகளில் ஒட்ட வேண்டும்” என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img