ஒரே ஒரு கப் டீ… 60 பேருக்கு பரவிய கொரோனா! தப்ளீக் லிங்க்… இப்போ புரியுதா ‘ஏன்’னு!?

இந்தியா சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
teacup

ஒரு கோப்பை தேநீரால் பரவிய கரோனா: கடும் தேடலுக்குப் பின் கண்டுபிடித்த காவல்துறை..!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 45 வயது கேபிள் ஆபரேட்டர் ஒருவர் கொரோனா பாதிக்கப் பட்டு உயிரிழந்தார்! அவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பதை போலீஸார் கடும் முயற்சி மேற்கொண்டு பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் கண்டுபிடித்துள்ளது.

அந்த கேபிள் ஆபரேட்டருக்கு ஏற்கெனவே காசநோய் இருந்துள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று குறித்த அறிகுறி தென்பட்டது. இதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆயினும், காசநோயின் கடுமையால், கொரோனா மருத்துவம் பலன் அளிக்காத நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார். இந்த கேபிள் டிவி ஆபரேட்டருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் படை ஒன்றை மாநிஅ அரசு அமைத்தது.

சிறப்பு விசாரணைக் குழு நடத்திய தீவிர விசாரணையில், குண்டூரைச் சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. இதில் 7வது நபர் மார்ச் 20ஆம் தேதி தனது பெற்றோரைப் பார்க்க நரசரோபேட் என்ற ஊருக்கு சென்றுள்ளார்.

அந்த வழியில், பேருந்து நிலையத்தில் இருந்த தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். அதே நேரம் கேபிள் ஆபரேட்டரும் அதே தேநீர்க் கடைக்கு வந்து ஒரு கப் தேநீர் குடித்துள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் அந்தக் கடையில் நின்று தேநீர் குடித்துள்ளனர். அப்போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு அந்த நபர் மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளது.

தில்லி தப்ளிக் இ ஜமாஅத் மாநாட்டுக்குச் சென்று பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்களின் செல்பேசி எண்களைக் கொண்டு, அவர்கள் எந்த பகுதிகளுக்கு எல்லாம் சென்றுவந்தனர் என்று கண்டுபிடித்தனர். அந்நேரத்தில் வேறு கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் யார் யார் இருந்துள்ளனர் என்பதைக் கண்டறியும் போதுதான் கேபிள் ஆபரேட்டருக்கு கொரோனா தொற்றியது குறித்து காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த தப்ளீக் இஜமாஅத் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 7வது நபரிடம் விசாரித்தனர் போலீஸார். அதில், அவர் அந்த பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் அருந்தியதை ஒப்புக் கொண்டார். அந்த கேபிள் ஆபரேட்டர் மூலமாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கும், நண்பர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாக 34 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கேபிள் ஆபரேட்டரின் நண்பர் மூலம் 5 மருத்துவர்கள் உட்பட 18 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அறிமுகமே இல்லாத இருவர், ஏதோ ஓர் இடத்தில் ஒரு டீ குடிக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்..? அதற்குள் இப்படி என்றால்..? உண்மையிலேயே நாம் இதன் சீரியஸ் தெரியாமல்தான் இருக்கின்றோமோ..? என்றே இந்தச் செய்தியைக் கேட்டதும் தோன்றுகிறது… என்று ஷாக் ஆகியிருக்கிறார்கள் ஆந்திர மாநிலத்தில்!

தமிழகத்திலோ… கும்பல் வன்முறைக் கலாசாரத்துக்கு காவல் துறை பயந்தும், ஓட்டு அரசியலுக்கு ஆள்பவர்கள் அடிபணிந்தும், சென்னை மக்கள் அனைவரின் உயிரும் இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.