லாக்டவுனில்… லஞ்சம் வாங்கி கண்டுக்காமல் விட்ட 2 டிராபிக் போலீஸார்… சஸ்பெண்ட்!

Published:

traffic police bribe
traffic police bribe

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடங்கி கிடக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டும் லாக்டௌன் நிபந்தனைகளை மீறி வெளியில் வந்து அலைகிறார்கள்.

அதனால் பல இடங்களில் போலீசார்கள் நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடினமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். வாகனங்களை சீஸ் செய்வதோடு வழக்குப் பதிவும் செய்து வருகிறார்கள்.

ஆனால் நிபந்தனைகளை மீறி ரோடு மீது அலைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சில டிராபிக் போலீசார் மட்டும் லஞ்சம் வாங்குகிறார்கள். வெளியில் வந்தவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் விட்டுவிடுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது கிருஷ்ணா மாவட்டம் போலீசார் சாட்டையை சுழற்றி உள்ளார்கள். வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் பணம் வசூல் செய்து வரும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளியன்று விஜயவாடா நகர கமிஷனர் துவாரகா திருமல ராவு தெரிவித்தார்.

விஜயவாடா ஒய்வி ராவு ஜங்ஷன் அருகில் லஞ்சம் வாங்கிய ஒன் டவுன் ட்ராஃபிக், டு டௌன் கான்ஸ்டபிள்கள் மீது சஸ்பென்ஷன் வேட்டு வைத்துள்ளார். இவர்கள் இருவரிடமும் துறை தொடர்பான விசாரணையை நடத்தும் படி சிபி துவாரகா திருமலை உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

பணம் வசூலின் பின்னால் யார் யாருடைய உற்சாகம் ஊட்டுதல் இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img