நாடுமுழுதும் ‘லாக்டவுன்’ மேலும் 2 வாரம் நீட்டிப்பு! தளர்வுகள் என்னென்ன?!

Published:

lockdown
lockdown

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்து வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால், இந்தியா முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வருகிறது.

tenkasi in lockdown
tenkasi in lockdown

நாடு முழுவதும் கொரொனா பாதிக்கப்பட்ட இடங்கள் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களாக பிரித்து, புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை; பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்; அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது!

இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது: சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்! முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது!

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு

  • பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும்
  • சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை
  • பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு;
  • சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது- மத்திய அரசு.

முன்னதாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது! கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 67 பேர் உயிரிழப்பு – 564 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனிடையே, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நிம்மதி ஏற்படும் விதமாக, சொந்த ஊர் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
  • சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.
  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
  • மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
  • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.
  • நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.
  • கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.
  • தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்- மத்திய அரசு.
  • சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்.
  • ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்- மத்திய அரசு.
  • சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.
  • சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு.
  • கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.
  • மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
  • 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்- மத்திய அரசு.
  • பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.
  • பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி- மத்திய அரசு.
  • பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு; சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது- மத்திய அரசு.
ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Related articles

Recent articles

spot_img