தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் மட்டும் 176 பேர் பாதிப்பு!

Published:

tamilnaducorona
tamilnaducorona

தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 நபருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு கண்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஏப்.30 நேற்று தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக இருந்தது.

corona in tn may 1st
corona in tn may 1st

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

தமிழகம் -203
சென்னை 176
செங்கல்பட்டு 8
திருவள்ளூர் 6
கடலூர் 1
திண்டுக்கல் 1
காஞ்சிபுரம் 2
கரூர் 1
மதுரை 3
நாகை 1
தஞ்சை 2
விழுப்புரம் 1
அரியலூர் 1

இதனிடையே இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர்!” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img