காங்கிரஸ் எம் பி கைது! முதல்வர் மகன் பண்ணை வீட்டை டிரோன் மூலம் வீடியோ!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
congras mp - 2026

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமாராவின் பண்ணை வீட்டை டிரோன் மூலம் வீடியோ எடுத்த காங்கிரஸ் எம்.பி-யை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும் அமைச்சருமான கே.டி.ராமா ராவின் பண்ணை வீடு ஜன்வாடா பகுதியில் உள்ளது. இந்த வீடு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

congras - 2026

இது தொடர்பாக மால்காஜ்கிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி ரேவந்த் ரெட்டி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் அந்த பண்ணை வீட்டை ட்ரோன் மூலம் ஐந்து பேர் வீடியோ எடுத்துள்ளார். உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தில்லியிலிருந்து திரும்பிய எம்.பி ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது சகோதரரை விமானநிலையத்தில் வைத்து சைபராபாத் காவ்ல்துறையினர் கைது செய்தனர்.

ரேவந்த் ரெட்டியின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் ட்ரோன் மூலம் படம் எடுத்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். எம்.பி கைது செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.