எம்ஜிஆர்., பல்கலை.,யில் மகளிர் தின விழா கொண்டாட்டம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
mgr university function1 - 2026

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தொழிலதிபர்கள் வரேந்தர் சிங் செனாய்,நவனீத் கவுர், குருநானக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் கவிதா,டாக்டர் மோனிஷாஅரவிந்த், ஆகியோர் கலந்து கொண்டனர்.

mgr university function2 - 2026

இந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் இக்கல்லூரி மாணவிகளுக்கு சமையல் போட்டி, ஒவியம், முக அலங்காரம், மருதாணி – சிகை அலங்கார போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி வணிகவியல் துறை தலைவர் டாக்டர் சி.பி. செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பேராசிரியை டாக்டர் எஸ்.பொன் முத்துமாரி, மற்றும் வணிகவரித் துறை பேராசிரியர்கள் அலுவலக ஊழியர்கள். மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

  • எஸ்.ஆர்.வி. பாலாஜி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.