
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் தீபாவளி புத்தாடை வழங்கல் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பாஜக மாவட்ட தலைவா் ஆனந்தன் அய்யாசாமி பயனாளிகளுக்கு வழங்கினர்.
செங்கோட்டை வல்லம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செங்கோட்டை ஜனசேவா டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
செங்கோட்டை நகரில் ஜனசேவா டிரஸ்ட் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலம் தொட்டு கபசுர குடிநீர், ஆறு துாய்மை படுத்துதல், இரத்த தானம் வழங்கல் உள்பட பல்வேறு சமூகநல பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல் கடந்த 5 வருடங்களாக ஏழை,எளிய ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் இலவச வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது.
இந்தாண்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜனசேவா டிரஸ்ட் பொருளாளா் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். டிரஸ்ட் கௌரவ ஆலோசகர் ஆசிரியா் முருகன் முன்னிலை வகித்தார். டிரஸ்ட் நிறுவனா் சமூக சேவகர் நாணயம் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
டிரஸ்ட் சட்ட ஆலோசகர் வழக்கறிஞா் சுபசேகர், ஸ்ரீ நர்சரி பள்ளி முதல்வர் மீனாகுமாரி, டிரஸ்ட் செயலாளா் ஐயப்பன் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் (எ)சுதன் சமூக ஆர்வலா் ஹரிஹரகிருஷ்ணய்யர் பாஜக மாவட்ட மகளிரணி செயலாளா் ரேவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா, வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலை வழங்கி வாழ்த்தி பேசினா்.
நிறைவாக செங்கோட்டை நகராட்சி 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் செண்பகராஜன் நன்றி கூறினார்.





