
பாரதிய ஜனதா கட்சி இன்றைய தினம் நாடு முழுவதும் சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர் மத்திய நகரம், வாக்கு சாவடி எண் 117 ல் கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் வீடு தோறும் சுதேசி எனது பெருமை, சுதேசி பொருள்களை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் பொறுப்பாளர், மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முருகன் முன்னிலை வைத்தார்.
மாவட்டச் செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், கரூர் மத்திய மாநகரத் தலைவர் சரண்ராஜ் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





