பாஜக.,வில் இணைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jyotiraditya scindia jb nadda - 2026

காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த ஒரு நாள் கழித்து, ஜோதிராதித்யா சிந்தியா பாஜக., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் புதன்கிழமை இன்று பாஜக.,வில் முறைப்படி சேர்ந்தார்.

அவர் பாஜக சார்பில், மாநிலங்களவைக்கான வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப் படுகிறது. முன்னதாக, அவர் நேற்று காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். அதே நேரம், கட்சிக்கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி,அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் அறிவித்தது.

நேற்று காலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசிய கையுடன் தனது ராஜினாமாவை அவர் அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.