கேரளா: கொரோனா பாதித்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
coronovirus - 2026

கேரளாவில் கொரோனா பாதித்து கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்டவை இருப்பதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது 96 வயது கணவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோட்டயம்: கேரளாவில் கொரோனா பாதித்து கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 85 வயது பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் இருந்து கணவன் – மனைவி மற்றும் அவர்களது 24 வயது மகன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி கேரளாவுக்குத் திரும்பினர். இவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதற்கிடையே, திருவாத்துக்கல் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவரிடம், கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் இரண்டு பேர், ஆரம்ப நிலையில் காய்ச்சல் வந்த போது சிகிச்சை பெற்றது தெரிய வந்ததை அடுத்து, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.