பசங்களுக்கு லீவு வுட்டேயாகணும்… முரண்டு பிடிக்கும் முதல்வர் எடப்பாடி!

கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
school children - 2026

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு இது குறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்-என்று கூறப் படுகிறது. பெருகி வரும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதைத் தடுத்து சிறு குழந்தைகளை வீடுகளுக்குள்ளேயே வைத்திருக்கச் செய்யும் வகையில் விடுமுறை விட யோசித்தது தமிழக பள்ளிக் கல்வித்துறை

இதை அடுத்து, வரும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது! இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலானது. இந்நிலையில், திடீரென இந்த அறிவிப்பு இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டாம் என்று முடிவு எடுக்கப் பட்டதாகக் கூறப் பட்டது.

இந்நிலையில், நேற்று அறிவித்தபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.