மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் பிரமோத்ஸவம் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
mannarkudi rajagopalan brahmotsav - 2026

ராஜமன்னார்குடி என்று போற்றப் படும் மன்னார்குடியில் ஸ்ரீவித்யா இராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று பங்குனி பிரமோத்ஸவத்துக்கு கொடி ஏற்றப்பட்டது.

mannarkudi rajagopalan - 2026

மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி திருக்கோயிலில், பங்குனி பிரமோத்ஸவம் இன்று தொடங்கியது. முதல் திருநாளான இன்று காலை துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்று வைபவம் இனிதாக நடைபெற்றது. தங்கக் கொடி மரத்தில் கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி, வேத மந்திரங்கள் முழங்க… அதிர் வேட்டுகள் விண்ணைப் பிளக்க.. மங்கள இசை ஒலிக்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

மன்னார்குடி ராஜகோபாலன் 18 நாள் பிரமோற்சவம் :

14.03.2020 – கொடிச்சப்பரம்
15.03.2020 – புன்னை வாகனம்
16.03.2020 – வெள்ளி ஹம்ச வாகனம்
17.03.2020 – தங்க கோவர்த்தனகிரி
18.03.2020 – பஞ்சமுக ஹனுமார்
19.03.2020 – கன்ட பேரன்ட பஷி
20.03.2020 – புஷ்ப பல்லக்கு
21.03.2020 – ரிஷியமுகபர்வதம்
22.03.2020 – சிம்ம வாகனம்
23.03.2020 – தங்க சூரியப்பிரபை
24.03.2020 – வெள்ளி சேஷ வாகனம்
25.03.2020 – தங்க கருட சேவை
26.03.2020 – காளிங்கநர்த்தனம், ஆண்டாள் திருக்கோலம், ஹனுமந்த வாகனம்
27.03.2020 – யானை வாகனம்
28.03.2020 – கோரதம்
29.03.2020 – வெண்ணைத்தாழி, செட்டி அலங்காரம், தங்க குதிரை வாகனம்
30.03.2020 – திருத்தேர்
31.03.2020 – ஸப்தாவர்ணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.