| “இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்” (பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்) (ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு) சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி. ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில், ‘ஸோம…ஸோம..’ என்ற சொல், பலதடவை வரக்கூடிய மந்திரம் ஒன்று உண்டு. பழக்கத்தில் வேஷ்டியை ஸோமன் என்று சொல்வதுண்டு. சிரௌதிகள், ஸோமா என்ற சாம மந்திரத்தைப் பெரியவாள் முன் கம்பீரமாகச் சொன்னார். அவர் நோக்கம்,ஸோமா என்ற சொல்லை திரும்பத் திரும்பக் கேட்டதும், தனக்கு ஒரு ஸோமனை (வேஷ்டியை) அளிப்பார்கள் என்பதாக இருக்கலாம்.. அவ்வாறே அவருக்குப் பத்தாறு வேஷ்டி, கொடுக்கும்படி உத்தரவாயிற்று. அதைப் பெற்றுக் கொண்டதும், அவர் ஊருக்குப் புறப்படத் தயாரானார். “இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்” என்றார்கள், பெரியவா. “அவசர வேலை இருக்கு…பண்ணை வீட்டுக் கல்யாணம். நான் அவசியம் போகத்தான் போகிறேன்…” பெரியவாளுக்குக் கோபம் வந்துவிட்டது. ” நீ ரயிலில் போனால், ரயிலைக் கவிழ்த்து விடுவேன். பஸ்ஸில் போனால், பஸ்ஸைக் கவிழ்த்து விடுவேன். நீ போகக் கூடாது…” அப்படியும் சிரௌதிகள் கேட்கவில்லை. உடனே புறப்பட்டுச் சென்றவர், சோகம் கப்பிய முகத்துடன்,ஆடித் தள்ளாடிக் கொண்டே மடத்துக்குத் திரும்பினார். தேசியத் தலைவர் ஒருவர் காலமாகிவிட்டதால், அன்றைய தினம் ரயில்,பஸ் எதுவும் ஓடவேயில்லை..பதிலளிஎல்லோருக்கும் பதிலளிமுன்அனுப்பு |
“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”
Popular Categories



