குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
president governor meet - 2026

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது.

கொரோனா பிரச்னை நாடு முழுதும் ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப் பட்டுள்ள சூழ்நிலையில், கொரோனா நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது.

மேலும், அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைக்கப் பட்டிருக்கிறது. ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

இது, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டு, இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறது. எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.