லஞ்சமே காரணம்!
நாட்டில் உள்ள வறுமையை போக்க மத்திய பாஜக அரசு, 2 சதவிகித பிரிமியத்தில், விவசாய காப்பீடு வழங்குகிறது!எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் எல்லா விவசாயிகளும்,மற்றவர்களும் தொழில் செய்ய வியாபாரம் செய்ய ரூபாய்10 லட்சம்வரை மாதம் முக்கால் சதவிகித வட்டியில் கடன் வழங்குகிறது மத்திய பாஜக அரசு! மாதம் 210 ரூபாயில் அனைவருக்கும் மாதம் ரூ.5000 பென்சன் கொடுத்து வாரிசுக்கு ரூ 8 லட்சத்து 50 ஆயிரம் வழங்குகிறது பாஜக அரசு! ஸ்டாட்டப் இந்தியா திட்டத்தில் ரூ. 2 கோடிவரை எவ்வித ஜாமீனும் உத்திரவாதமும் இல்லாமல் தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு பாஜக அரசு வழங்குகிறது! மத்திய அரசின் திட்டம் எதுவாக இருந்தாலும் அதை மாநில அரசுதான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்! காரணம் அதிகாரிகளும் சேவைநிறுவனங்களும் தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பில் இருக்கும் தமிழக மாநில அதிமுக அரசு அதை செய்யாமல் இருட்டடிப்பு செய்கின்றன! எனினும், பாஜக வினர் முடிந்தவரை மக்களுக்கு எடுத்து சொல்வதால்,மேலே சொன்ன திட்டங்கள் அனைத்திலும் 50 லட்சத்திற்கும் அதிகமான தமிழக மக்கள் பயன் பெற்றுள்ளனர்!
தற்போது 100 நாள் வேலையை 150 நாளாக பாஜக அரசு உயர்த்தியுள்ளது! நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு இலவச வீடு! நகர்புற ஏழைகளுக்கும் இலவச வீடு! நடுத்தர வசதி படைத்தோருக்கு வீடு கட்டிக்கொள்ள குறைந்த வட்டியில் கடன்! வருடம் 12 ரூபாயில் ரூபாய் 2 லட்சம் விபத்து காப்பீடு!வருடம் 330 ரூபாயில் ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பூடு! ஆகிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசின் திட்டம் எதுவானாலும் மாநில அரசுகள்தான் அவற்றிற்கான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும். இதை கட்சிரீதியாக பயன்படுத்திக்கொள்ளும் மாநில அரசு அவர்களின் கட்சிக்கார்ர்களைமட்டும் தேர்வு செய்து பொதுமக்களுக்கு துரோகம் செய்கிறது! அதுமட்டுமின்றி மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்கள்போல காட்டிக்கொள்கிறது.
சென்னை மதுரை என தமிழ்நாட்டில் 12 நகரங்களையும்33 சிறு நகரங்களையும் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ம்ருத் நகரங்கள் என அறிவித்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய பாஜக அரசு! காஞ்சியையும் நாகையையும் ஆன்மீக நகரமாக அறிவித்து வளர்ச்சி திட்டங்களை வழங்கி பணம் ஒதுக்குகிறது மத்திய பாஜக அரசு! இந்த திட்ட்த்தின்கீழ் கட்டப்படும் மேம்பாலம் போன்ற பணிகளை மாநில அரசு தங்களின் திட்டம்போல காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறது!
இத்தனையும் செய்யும் பாஜக அரசு ஒரு ஊழலும் இல்லாத அரசாக நடந்துவருகிறது! ஊழலுக்காகவே அரசியல் செய்யும் தமிழக அரசியல் வாதிகள் பலருக்கு இது பிடிக்கவில்லை! ”பாஜக வினர் ஊழல் இல்லாமல் நல்லது செய்வதைப்போல நீங்களும் ஏன் செய்யக்கூடாது?”என்று மக்கள் கேட்டுவிடுவார்களோ என்னும் பயத்தில் தமிழகத்தில் பல அரசியல் வாதிகள்! போய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றனர்! தமிழக அரசியல் வாதிகளால் நடத்தப்படும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் இதையே செய்துவருகின்றன!
ஏர்கெனவே நான் இங்கு சொன்னதைப்போல,மேலே சொன்ன திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசே நேரடியாக நிறைவேற்றிடும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை! மாநில அரசு மூலமாகத்தான் நிறைவேற்றப்படவேண்டும்! மாநில அரசின் ஒப்புதலும் வேண்டுகோளும் இல்லாமல் எந்தஒரு திட்டத்தையும் மத்திய அரசு மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது!
தமிழகத்தில் தேசத்துரோகமான செயல்கள் நடந்தாலோ,சட்டம் ஒழுங்கு மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத வகையில் கெட்டுப்போனாலோ மாநில அரசை மத்திய அரசு கலைத்துவிடலாம்! ஆனால் மாநில அரசின் ஒப்[புதல் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவரவும் முடியாது! மத்திய அரசு அந்த திட்டத்தை நேரடியாக மக்களுக்கு வழங்கவும் முடியாது! இதுதான் இந்திய அடசியல் அமைப்புச்சட்டம் சொல்வது!
நிலத்திற்கடியில் இயற்கை எரிவாய்வு இருக்கும் இடங்களில் அதை உறிந்து எடுத்து பெட்ரோலுக்குப்பதிலாக பயன்படுத்தும் திட்டங்களை தமிழக மாநில அரசு விரும்பி வரவேற்று வேண்டுகோள் விடுத்து ஒப்புதல் கொடுத்ததால்தான், 2009 ல் இத்திட்டம் புதுக்கோட்டை ஆலங்குடியில் துவக்கப்பட்டது!
அப்போது அந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வலது கம்யூனிஸ்ட் காரர்! (ராஜசேகர்)நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ்காரர்(பா.சிதம்பரம்), தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக!மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்! தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியாக இருந்தது அதிமுக! காங்கிரஸ் திமுக, கம்யூனிஸ்ட் எல்லோரும் சேர்ந்து திட்டத்தை கொண்டுவரும்போது பிரதான அதிமுக எதிர்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!
2009 திலேயே திட்டம் துவங்கியது! 4000 அடி ஆழம்வரை துழைப்போடப்பட்டு இயற்கை எரிவாயு சோதனையாகஎடுக்கப்பட்டது! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இயற்கை எரிவாய்வு பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில் கிடைக்குமானால், விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நிரந்தரமாக பல்லாண்டுகளுக்கு வாயுவை உறிந்து எடுக்கலாம்தமிழகம் உட்பட இந்திய பெட்ரோலிய தேவைக்கு பயன்படுத்தலாம், இதனால் தமிழகத்திற்கு அதிகலாபம் கிடைக்கும்! என்னும் திட்டத்தில்தான், திமுக, அதிமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளால் திட்டம்துவங்கப்பட்டது!
சோதனையில் “ஆம், இயற்கை எரிவாயுவை இங்கு எடுக்கமுடியும்” அன்று பதில் வந்ததால், முறைப்படி உறிந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது! மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படாமல் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்திருந்தாலும்,சோதனை வெற்றியானதால் அனுமதி வழங்கியிருப்பார்கள்! ஆனால் அந்த வேலையை ஒரு கம்பெனியிடம் ஒப்படைக்கும்போது அந்த கம்பெனியிடம் இருந்து ஒரு பெரும் தொகையை வாங்கி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் எல்லோரும் பங்குப்போட்டு கொடுத்திருப்பார்கள்!
பாஜக விடம் அத்தகைய ஊழல் என்னும் தேசத்துரோகம் இல்லாத்தால் பணம் கம்பெனியிடமிருந்து வாங்கப்படவில்லை பங்கிட்டு கொடுக்கப்படவில்லை! எனவே கோபமடைந்த அனுமதி வழங்கிய கட்சியினரே மக்களிடம் தவறான பொய்யான தகவல்களை சொல்லி திட்டத்தை தடுக்கிறார்கள்!
இதே போன்று இன்னொரு சம்பவம் சென்னையில் நடந்ததை இங்கு நான் சுட்டிக்காட்ட வேண்டும்.மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை மேம்பாலம் கட்டும்பணி திமுக ஆட்சியில் ஒப்பந்தக்காரரிடம் லங்சம் பெற்றுக்கொண்டு துவக்கப்பட்டது! ஆட்சி அதிமுக வுக்கு மாறிவிட்டதால் அதிமுகவினருக்கும் லங்சம் கொடுக்க ஒப்பந்தக்காரரால் முடியாமல் போனதால் அந்த வேலை நிறுத்தப்பட்டது!அங்கே ஒப்பந்தக்காரரால் கொடுக்க முடியவில்லை இங்கே பாஜக கொடுக்கவிடாமல் தடுக்கிறது! பாஜக எதிர்பார்க்கும் வேலை சுத்தத்திற்கு யாருக்கும் லங்சம் கொடுக்கமுடியாது! யற்கை எரிவாயு எடுக்கப்படும்போது விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் வராதவகையில் பாதுகாப்புப்பணிகளை சரியாக செய்யவேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் உத்தரவு! இந்த கட்சியினர் கம்பெனிக்காரணிடம் லஞ்சம் வாங்குவதை அனுமதித்தால் கம்பெனிக்காரன் பாதுகாப்புப்பணிகளை சரியாக செய்யமாட்டான். எனவே எந்த திட்டமாக இருந்தாலும் ஊழல் இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக இருக்கிறது! ஆகமொத்தத்தில், ஆலங்குடி போராட்டத்திற்கு,அரசியல்வாதிகளுக்கு கம்பெனிக்காரன் லங்சம் தராததே காரணம்! தமிழக அரசியலை 40 ஆண்டுகளாக கவனித்துவரும் அனுபவத்தில் இதை நான் உறுதியாக சொல்கிறேன்!
மத்தியிலே ஆட்சி செய்யும் பாஜக அரசு மக்கள் நல அரசு!மக்கள் வேண்டாம் என்று சொன்ன வுடனேயே மத்திய பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் அவர்கள் திட்டத்திற்கு தடை விதித்துவிட்டார்கள்! நாடு முழுமையும்69 இடங்களில் இத்தகைய திட்டம் நிறைவேற்றப்படுகிறது.பல மாநிலங்களில் இது நடந்துக்கொண்டிருக்கிறது! மக்கள் விரும்பாத இடத்தில் தேவையில்லை! விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இத்திட்டத்தை செயல் படுத்த முடியும் என்பதுதான் நிபுனர்களின் கருத்து!
மாநில அரசின் ஒப்புதலோடுதான் மத்திய அரசு ரேசன் அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.28 மானியம் தருகிறது! ரேசன் மண்ணெண்ணை லிட்டருக்கு ரூ.13 மானியம் தருகிறது!மாநில அரசு வேண்டாம் என்றால் மத்திய அரசு நிர்ப்பந்தப்படுத்த முடியாது. சட்டத்தில் அப்படி இடம் இல்லை! ஆலங்குளம் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை மாநில அரசிடம்தான் வைக்கவேண்டுமேயன்றி மதிய அரசிடம் அல்ல!
போராட்டக்காரர்களின் கருத்துப்படி, விவசாயத்தை அழிப்பது மாநில அரசுதான்! அதாவது திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான்! பாஜக அல்ல!
– குமரிகிருஷ்ணன்



