அறையில் இயக்குநர் மர்ம மரணம்! கொரோனா பயத்தால் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்!

சினி நியூஸ் சினிமா தமிழகம்
director

அறைக்கு உணவு எடுத்துக்கொண்டு நண்பர்கள் சென்றனர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது, அவர் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் அவரது உடல் கொரோனா பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

azaippithaz

இருப்பினும் இறந்த P.K.ராஜ்மோகனின் நண்பரும் இயக்குனருமான கீரா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கோவையில் உள்ள P.K.ராஜ்மோகனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.