ஓவியாவை வளைத்துப் போட்ட ஸ்டாலின்!

oviya 90ml
oviya 90ml

சினிமாவில் தன்னைக் காட்டி மக்களிடம் பெற்ற புகழை அரசியலுக்கு பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றுதான். இதில் வென்றவர்கள் சிலர். சினிமாவில் பெற்ற புகழையும் இழந்து நடுத்தெருவில் நின்றவர்கள் பலர்.

இப்போது இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் ‘பிக்பாஸ்’ தொடரில் செண்டிமெண்ட் டச் கொடுத்து நடித்துப் புகழ்பெற்ற ஓவியா. இவரும் இப்போது நடிகர் வடிவேலு பாணியைப் பின்பற்றி திமுக.,வுக்காக களம் இறங்கக் காத்திருக்கிறார்.

கடந்த வாரம் சென்னைக்கு பாரதப் பிரதமர் மோடி வந்திருந்த போது, வழக்கம் போல் திமுக., ‘கோ பேக் மோடி’ எனும் ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரில் பதிவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பதிவிலும் சின்னதாக ஒரு பதிவு செய்தார் ஓவியா. கோபேக்மோடி என்று, அவர் கொடுத்த டிவிட்டர் குரல் திமுக., பிரசாரத்துக்கான அச்சாரமாகக் கருதப் பட்டது. அரசியல் பக்கம் சாயாமல் இதுவரை இருந்து வந்த ஓவியா, இப்போது திமுக.,வுக்காக பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார். அவரை இப்போது திமுக., வளைத்துப் பிடித்துள்ளது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

திமுக.,வுக்காக களம் இறங்கும் ஓவியா நடித்த முதல் படம் ‘களவாணி’. தமிழகத்தில் திராவிட இயக்கப் பிரசாரத்துக்காக திமுக., தேர்வு செய்திருக்கும் நடிகை ஓவியா, கேரளத்தைச் சேர்ந்தவர்.

சினிமாவில் புகழ் கிடைக்காத நிலையில், தனியார் டிவி.,யில் கமல்ஹாசன் நடிப்பில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ தொடரில் செண்டிமெண்ட் டச் கொடுத்து நடித்து, ரசிகர்களிடம் புகழ்பெற்றார் ஓவியா. அதன் மூலம் பின்னர் திரையுலகில் பெரிதாக சாதித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சில படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அடுத்து அரசியல்களம் தான் என்று கணித்து, சின்னதாக ஒரு டிவீட் போட்டார். அது இப்போது நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஓவியா பதிவு செய்த டிவிட்டுக்கு எதிர்ப்பு பலமாகக் கிளம்பியது. ஆனால் திமுக.,வினர் அவருக்காக ஆதரவுப் பிரசாரம் செய்ய, இப்போது சட்டமன்றத் தேர்தலில் பிரசாரத்துக்காக களம் இறக்க முடிவு செய்திருக்கிறார் திமுக.,வுக்காக ஒப்பந்தம் போடப்பட்டு பிரசார உத்திகளை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
oviya-tweet
oviya-tweet

ஓவியாவை ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பி.கே.யின் ஐபேக் டீம் பிரசாரக் களத்துக்கு இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் வெளிச்சம் பட்டு விட்டதால், சினிமா வெளிச்சம் இனி இருக்காது என்றும், இதுவே ஓவியாவின் திரையுலகப் பயணத்தின் கடைசி ஆண்டாக இருக்கும் என்றும் கருத்துப் பதிவுகளை செய்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories