அப்போலோவில் ஜெயலலிதா சாப்பிட்ட அந்த ஒரு நாள் ‘இட்லி’ உள்பட உணவுக்கான செலவு ரூ.1.17 கோடி..!

Published:

jayalalitha apollo - 2026

அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது!

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான கட்டணத்தில் ரூ. 44 லட்சம் பாக்கி உள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் கட்டண பாக்கி குறித்த விவரங்களை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் வழங்கியுள்ளது. அதன்படி ஜெயலலிதா 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு ரூ.6,85,69,000 என தகவல் வெளியாகியுள்ளது.

செலவு விவரங்கள்…

  • லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92,07,844
  • சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு பிசியோதெரபிக்கான செலவு ரூ.1,29,09,319
  • (ஜெயலலிதா) அறை வாடகை ரூ.24,19,800
  • (பொதுவான) அறை வாடகை ரூ.1,24,79,100

இவற்றுக்கு, அப்போலோவுக்கு 2016 அக்டோடபர் 13ஆம் தேதி ரூ.41,13,304 காசோலையாக அப்போலோ நிர்வாகத்திடம் அளிக்கப் பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பின்னர், 2017 ஜூன் 15ல், அதிமுக சார்பாக ரூ.6 கோடி காசோலையாக கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

மொத்த செலவான ரூ.6,85,69,584 -இல், ரூ.6,41,13,304 கொடுக்கப் பட்டுள்ளதாகவும் இன்னும் கட்டண பாக்கியாக ரூ.44,56,280 வர வேண்டியுள்ளது என்றும் அப்போலோ நிர்வாகம் தகவல் அளித்துள்ளதாம்!

இதில், உணவுக்கான செலவு என்பது, ஜெயலலிதா உட்கொண்ட உணவுகளுக்கானது மட்டுமல்ல, உடனிருந்தவர்கள், பார்வையாளர்கள், செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கும் சேர்த்துதான் என்று குறிப்பிடப் பட்டுள்ளதாம்!

Related articles

Recent articles

spot_img