கருணாநிதி சிலைத் திறப்பில் மின்திருட்டு: ஜெயக்குமார் புகார் #மின்திருட்டுதிமுக

Published:

jayakumar - 2026

சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னை மாநகராட்சியின் மின்சாரம் திருடப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. இந்த விவகாரத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களில் ஒருவராவது காவிரி, மேகதாது உள்ளிட்ட பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம் சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அமைச்சர்கள் ஜெயகுமார், சரோஜா ஆகியோர் வந்திருந்தனர்.

Related articles

Recent articles

spot_img