
பசுப் பாதுகாப்பு மற்றும் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி இலங்கையில் சிவசேனை கட்சியினர் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் கோரிக்கை மனு ஊர்வலம் சென்று மனு அளித்தனர்.
இது குறித்து மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்ததாவது…. செப்.27 ஞாயிறு கொழும்பில் காலிமுகத்திடல் சங்கரில்லா விடுதி எதிரே ஊர்வலம் ஒன்றைத் தொடங்கினோம்!

பசு பாதுகாப்பு மற்றும் வதைத் தடைச் சட்டம் கொண்டு வரக் கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு
புத்தர்கள் வண. தருமாம் தேரர் தலைமையிலும்
எனது தலைமையில் இந்துக்களும் இன்று ஊர்வலமாகச் சென்றோம்
இந்துக்கள் சார்பில் நானும் புத்த சமயத்தின் சார்பில் வண் தருமராமத் தேரரும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவைக் கொடுத்தோம் என்றார்.