செப்.27: தமிழகத்தில் இன்று… 5791 பேருக்கு கொரோனா; 80 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
corona-image
corona-image

தமிழகத்தில் புதிதாக 5,791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்று  சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5791 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,80,808  ஆக அதிகரித்துள்ளது 

சென்னையில் புதிதாக 1280 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163423  ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,313 ஆக உயர்ந்துள்ளது.  

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5706 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர் இதனால் இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை  5,25,154 ஆக அதிகரித்துள்ளது 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் 

district-wise-covid-19-sep-27
district-wise-covid-19-sep-27

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.