கரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி வீடியோ

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கரூர் அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் ஆலயத்தில் ஸ்வாமி பரமபத வாசல் வழியாக கடந்து வந்தார். கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் போட்டவாறு சுவாமியை தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வைணவ தலங்களில் சுவாமி பரமபதவாசல் வழியாக வரும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறும். கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு  அபயபிரதான ரங்கநாதர் ஆலயம்

இந்த ஆலயத்தில் சயனத்தில் இருந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் பெருமாள்,. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சுவாமி பரமபத வாசல் வழியாக வந்தார். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து, பரமபத வாசல் வழியாக வந்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். இந்நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.