ஏசி.,யுடன் உள்ள கடை திறக்க தடை: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

சற்றுமுன் நெல்லை
sandeep nanduri
sandeep nanduri

தூத்துக்குடியில் ஏசி.,யுடன் உள்ள நகைக்கடை திறக்கத் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஏசியுடன் இயங்கும் ஜீவல்லரி திறக்க தடை விதிக்கப் படுவதாகக் கூறினார். மாநகராட்சிக்கு வெளியே உள்ள தொழிற்சாலைகள் 50 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்று கூறிய அவர், அரசு ஒப்பந்த பணிகள் நடக்கலாம்; பிரிண்டிங் பிரஸ் செயல்படலாம்; கட்டுமான பணிகள் நடக்கலாம் என்று ஒவ்வொரு துறையாக விளக்கினார்.

காம்ப்ளஸ்சில் இல்லாமல் தனியாக இருக்கும் கடைகள் செயல்படலாம் ; கடையில் அதிக கூட்டம் கூட்டினால் அனுமதி ரத்து செய்யப் பட்டு, சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.