கொரோனா எண்ணிக்கையை பெரிதுபடுத்த வேண்டாம்-மீடியாக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சற்றுமுன்
edappadi video conference1
edappadi video conference1

சென்னை: அடுத்தடுத்த நாள்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதை தவிர்க்க இயலாது என்பதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை தமிழக ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என முதல்வர் பழனிசாமி கேட்டு்க் கொண்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கொரோனா நோய்தடுப்பு சிறப்பு அலுவலர் டாக்டர் ராதாகிருஸ்ணன், அடுத்து வரும் நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்ற-இறக்கத்துடன் காணப்படும் என்பதா்ல் இதன் எண்ணிக்கையை ஊடக நண்பர்கள் பெரிதுபடுத்தி மக்களை பீதிக்குள்ளாக வேண்டாம் என்பது தமிழக முதல்வரின் வேண்டுகோளாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது கோயம்பேடு சந்தை பாதிப்பு விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது. வடசென்னையில் குடும்பம் குடும்பமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் வார்டு வாரியாக சென்று முகாமிட்டு அப்பகுதிகளில் பரிசோதனையை முடுக்கிவிட்டுள்ளனர். திருவேற்காடு மார்க்கெட் பகுதிகளில் வந்து சென்றோர்க்கு அதிக பாதிப்புகள் ஏதுமில்லை. வெறும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கு போதுமான மருத்துவ உபகரணங்கள், உதாரணமாக பிசிஆர் கிட்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் சமூகவிலகை கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வந்தால் கொரோனா நோயில் இருந்து நாம் முழுமையாக விலகிவிடலாம். சென்னை போன்ற 1 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் தற்போது ஏற்பட்டு்ள்ள பாதிப்பு எண்ணிக்கை என்பது பெரிய விசயமே அல்ல. எனவே ஊடக நண்பர்கள் இந்த விசயத்தில் அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தி வருவதாக ராதாகிருஸ்ணன் கூறினார்.

இதனிடையே கொரோனா பாதித்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் இன்று (மே 10) உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து்ள்ளது.
கடந்த 7 ம் தேதியன்று சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த 59 வயதான தூய்மைப் பணியாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிந்தார். கொரோனா பாதிப்புக்கு தூய்மைப் ப ணியாளர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

cm 1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.