ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மே-18க்கு முன் அறிவிக்கப்படும்: பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi speech - 2026

ஊரடங்கு – 4 என்பது புதிதானது. மே 18 ஆம் தேதிக்குள் அது குறித்து அறிவிக்கப்படும் என்று பேசினார் பிரதமர் நரேந்திர மோதி!

நாடு தழுவிய ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். ஊரடங்கு எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது மே 18ஆம் தேதிக்கு முன்னர் முடிவு செய்து, மே 18ம் தேதி வெளியிடப்படும் என பிரதமர் உரையில் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களிடையே 4 வது முறையாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்ததாவது…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல

உலகம் கடந்த 4 மாதமாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அன்பிற்குரியவர்கள் சிலரை பறிகொடுத்துள்ளோம்

கொரோனா என்ற ஒரு வைரஸ் எல்லோரது வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது

ஒட்டுமொத்த உலகமுமே கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது

நம்மை, நாமே காப்பாற்றிக் கொண்டு, கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல

நாம் இதற்கு முன்பு, இதுபோன்ற பிரச்சினையை கேள்விபட்டதோ, பார்த்ததோ இல்லை

ஒரே ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 42 லட்சம் பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.

கொரோனா போன்ற தாக்குதல் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான் முடியும்.

உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது வேதனை தருகிறது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பெரும் ஆபத்தில் இருக்கின்றனர்.

நாடு இதுவரை எதிர்கொள்ளாத மாபெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப் படவில்லை. மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன.

தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.