ராகு இந்த கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்… இந்த பூஜையை செய்ங்க.. பிறகு பாருங்க…!

ஆலோசனைகள் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்

raghu in thirunageswaram - 2026

உங்கள் ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்ந்திருந்தால் ஞாயிற்றுக் கிழமையில் ராகு காலத்தில் சரபேஸ்வரரை பூஜித்து வணங்க சிறப்பும் பெறலாம்.

சந்திரன், ராகு இணைந்திருந்தால் திங்கட்கிழமை ராகு வேளையில் கருமாரி அம்மனை வணங்குவது நன்று.

செவ்வாய், ராகு இணைந்து இருந்தால் செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜித்து வணங்குவது நன்று.

புதன், ராகு இணைந்திருந்தால் புதன்கிழமை ராகு காலத்தில் வராஹமூர்த்தியை வணங்க உத்தமம்.

குரு, ராகு சேர்க்கையாக இருந்தால் வியாழன் அன்று ராகு காலத்தில் ருத்திரனை வணங்க சுபிட்சம் உண்டாகும்.

சுக்கிரன்,  ராகு சேர்ந்திருந்தால் வெள்ளிக்கிழமை ராகு நேரத்தில் காமாட்சியை வணங்கவும்.

சனி, ராகு இணைந்திருதால் ராகு காலத்தில் பைரவரை வணங்குதல் சிறப்பைத் தரும்.

அந்த அந்த நாளில் அவரவர் ஜாதகத்தில் ராகு சேர்ந்திருக்கும் கிரகத்தின் கிழமையினை உத்தேசித்து வணங்கி, அனைவரும் நன்மை பெறட்டும்.

பரிகார ஜோதிடர் S காளிராஜன்,
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம்,  கீழத்தெரு – இலத்தூர்- 627803

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.