நெல்லை மாவட்டத்தில் 40 பேருக்கு இன்று கொரோனா உறுதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
corona awareness
corona awareness

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மகராராஷ்ட்ர மாநிலத்தில் இருந்து வந்தவர்கள்.

தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், துாத்துக்குடியில் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரத்தில் 32 பேருக்கும், பாப்பாக்குடியில் மூவருக்கும், ராதாபுரத்தில் ஒருவருக்கும், வள்ளியூரி்ல் இருவருக்கும், மானுாரில் ஒருவருக்கும், நெல்லை மாநகராட்சி பகுதியில் ஒருவருக்கும் என கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வசந்த நகரில் வசிக்கும் 59 வயது ஆண் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். நாங்குநேரி அருகே விஜயஅச்சம்பாடு கிராமத்திற்கு வந்துள்ள 11 பெண்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நாங்குநேரி அருகே அ.சாத்தான்குளத்தை சேர்ந்த ஒரே வீட்டில் ஐந்து பேருக்கும்,
முனைஞ்சிப்பட்டி திருமலைபுரத்தை சேர்ந்த 51 வயது ஆணுக்கும், கீழபாப்பாக்குடியைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், முக்கூடலைச் சேர்ந்த இருவருக்கும், ராதாபுரம் ஆவுடையாள்புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்,
வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த நெல்லை மண்டலத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.