ஊரடங்கு: ஜூன் 15 வரை நீடிக்குமா? மத்திய அரசு ஆலோசனை!

சற்றுமுன்
lockdown

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மே 31ம் தேதியுடன் முடிவடையும் 4ம் கட்ட ஊரடங்கை ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி, லாக் டவுன் 4.0 வருகிற மே 31ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடைய 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்புக்கு முன் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச திட்டம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.முதல்வர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விமான, ரயில் சேவைகள் தொடங்கிவிட்டாலும் கூட முழுமையாக கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.