சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது கீழே விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாக இழுத்து ஆர்பிஎப் காவலர் காப்பாற்றினார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6வது நடைமேடையில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இரவு புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் ஏறுவதற்கு மேடவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் சற்று தாமதமாக வந்துள்ளார். எப்படியும் ரயிலில் ஏறி ஆகவேண்டும் என்ற முயற்சியில் அந்த பெண் ஓடும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார்.



