அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி நீதிபதி பெயர் பரிந்துரை

12 June 29 Amal Tubar - 2026அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோனி கென்னடி வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார்.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 9 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுவிட்டால் அவர் உயிரிழக்கும் வரை பதவியில் நீடிப்பார். சில நீதிபதிகள் மட்டும் தாமாக முன்வந்து ஓய்வெடுப்பதாக அறிவிப்பது உண்டு. அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அந்தோனி கென்னடி (81) வரும் ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறப்போவ தாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியை தேர்வு செய்யும் பணியை அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் நீதிபதி யாக வேண்டும் என்றால் அவரை அதிபர் பரிந்துரைக்க வேண்டும். அந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தின் செனட் அவை உறுதி செய்ய வேண்டும்.இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்காக 25 நீதி பதிகள் அடங்கிய பட்டியலை அதிபர் ட்ரம்ப் தயார் செய்துள்ளார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீதிபதி அமுல் தாப்பர் இடம்பெற்றுள்ளார். இவர் தற்போது 6-வது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு 25 நீதி பதிகள் கொண்ட பட்டியலில் இருந்து 3 நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒருவர் செனட் அவையின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஸ்காலியா கடந்த 2016-ல் மரணமடைந்தார். அந்த பதவிக்கு அப்போதைய அதிபர் ஒபாமா, 3 நீதிபதிகளைப் பரிந்துரை செய்தார். இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஒபாமா தனது ஆட்சியின் கடைசி காலத்தில் இருந்ததால் அவர் பரிந்துரையை செனட் அவை பரிசீலிக்கவில்லை. கடந்த 2017-ல் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, நீல் கார்சச் என்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories