கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதியன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற ஜூலை 27 ஆம் தேதி நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. 1 மணி நேரம் 43 நிமிடங்கள் காட்சியளிக்கும் இந்த சந்திர கிரகணம், ரத்த சிவப்பு நிறத்தில் தெரியும் என கூறப்படுகிறது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய கண்டங்களில், சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் வரும் ஜூலை 27 ஆம் தேதி தோன்றவுள்ளது
Popular Categories



