December 6, 2025, 10:29 AM
26.8 C
Chennai

3டி மாஸ்க்: புனே ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு!

mask
mask

புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸை செயலிழக்க வைக்கும் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பலமுறை உபயோகிக்கலாம். இது 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பலவித பெயரில் உலா வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறி மக்களை தாக்கி வருகிறது.

mask
mask

கொரோனா பரவாமல் தடுக்க இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மாஸ்க் இல்லாமல் இனி வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்-95 வகை முகக்கவசங்களை அணிந்தால் மட்டுமே, ஓரளவேனும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்களை முழுவதுமாக தடுக்கும் முகக்கவசங்கள் அணிந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கொரோனா தாக்காமல் தடுக்கும் வகையில் புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான Thincr Technologies கொரோனா வைரஸை செயலிழக்க வைக்கும் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ்க் மொத்தமாக மூன்று லேயர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசத்தின் வெளிப்புற லேயரில் நுண்ணியிரிகளைக் கொல்லும் திறன் கொண்ட சோடியம் ஓலெஃபின் சல்போனேட் என்ற ரசாயனம் பூசப்பட்டிருக்கும்.

இந்த ரசாயனம் அழகு சாதான பொருள்களைத் தயாரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சோப் தயாரிக்கும் மூலக்கூறுகளைக் கொண்டது.

mask 1
mask 1

இந்த ரசாயனம் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் ஒட்டிய உடன் அதனுடைய வெளிப்புற சவ்வை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக வைரஸ் செயலிழந்துவிடும்.

நடுவிலுள்ள லேயரானது, வெளிப்புற லேயரில் பூசப்பட்டிருக்கும் ரசாயனத்திலிருந்து முகக்கவசம் அணிவரைப் பாதுகாக்கும். அந்த ரசாயனம் அணிபவரின் தோலைப் பாதிக்கும் தன்மை கொண்டது.

முகத்துடன் நேரடி தொடர்புகொண்ட உள்புற அடுக்கு, 100 சதவிகிதம் பருத்தியால் உருவாக்கப்பட்டிருக்கும்.

இது சுவாசப்பதில் இருக்கும் சிரமங்களைப் போக்கும். இது சாதாரண வகை, என் 95 வகை முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து வகை முகக்கவசங்களும் உட்புற லேயரில் இடம்பெறச் செய்யலாம்.

இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பலமுறை உபயோகிக்கலாம்.

Thincr Technologies நிறுவனம் வணிக அளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்தத் தயாரிப்பின் காப்புரிமைக்கும் விண்ணப்பித்திருக்கிறது. இந்த முகக்கவசத்தின் பயன்பாட்டுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இந்த திட்டத்திற்கு நிதியளித்தது.

இதுவரை, 6,000 முகக்கவசங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நந்தூர்பார், நாசிக் மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும், பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories