கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்! தமிழகத்தில் 1149 பேருக்கு தொற்று உறுதி!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
coronachina
coronachina

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது! இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழக கொரோனா நிலவரம்!
  • மொத்த பாதிப்பு – 22,333
  • சிகிச்சையில் உள்ளவர்கள் – 9,400
  • குணமடைந்தவர்கள் – 12,757
  • உயிரிழப்பு – 173
  • மொத்த பரிசோதனைகள் – 4,91,962
  • இன்றைய பரிசோதனைகள் – 12,807
  • சென்னை கொரோனா நிலவரம்!
  • மொத்த பாதிப்பு – 14,802
  • இன்று உறுதி – 804
  • சிகிச்சையில் உள்ளவர்கள் – 6,781
  • குணமடைந்தவர்கள் – 7,891
  • உயிரிழப்பு – 129

தமிழ்நாட்டில் இன்று 1149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,000ஐ தாண்டியது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,333ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு 14,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,802ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 1,000ஐ தாண்டியது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்!

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,757ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது.

பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 92 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

corona maya
corona maya
corona mayb
corona mayb
corona mayc
corona mayc

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.