தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு தொற்று! சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கொரோனா!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
coronavirus
coronavirus

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 7ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது! தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1458 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று 4ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 1,146 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச அளவாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 251ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 633 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395ஆக உயர்ந்துள்ளது.

பிற நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய 13 பேருக்கும் தில்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கும், கேரளா, கர்நாடகாவிலிருந்து தமிழகம் வந்த தலா 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

சென்னையை அடுத்து, அதிகபட்ச அளவாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 80 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

coronajuna
coronajuna
coronajunb
coronajunb

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.