கொரொனா: ஒரே நாளில் 191 கர்ப்பிணிகளுக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் கோவை

pracnant

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 36, 841 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.