நேர்த்தியாய் ஒரு நேந்திர பழ சாண்ட்விட்ச்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
netram pazham

நேந்திரம் பழ சாண்ட்விட்ச்

தேவையானவை:
நேந்திரம் பழம் – ஒன்று,
பொடித்த வெல்லம் – ஒரு கப்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் போல சுருள கிளறி இறக்கவும். நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். ஒரு பாதியின் மீது பூரணத்தை தடவி, மேலே இன்னொரு பாதியை வைத்து மூடி சாண்ட்விச் போல பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.