காமராஜர் பல்கலை பதிவாளர் பொறுப்பேற்பு !

கல்வி மதுரை லைஃப் ஸ்டைல்
mku register
mku register

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய பதிவாளராக திருமதி வசந்தா பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இவர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது பெண் பதிவாளராக பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக பதிவாளராக பணியாற்றிய பேராசிரியர் சங்கர் நடேசன் பணிச்சுமை காரணமாக பணியில் இருந்து விடுபட துணைவேந்தருக்கு கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து புதிய பதிவாளர் தேர்வு குறித்து பல்கலை கழக பேராசிரியர் குமரேசன், பேராசிரியர் சுதா, மற்றும் பேராசிரியர் வசந்தா ஆகியோர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது .

இதில் பேராசிரியர் வசந்தா ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டுள்ளார். இவர் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார் மேலும் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவராகவும் பணியாற்றுகிறார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது பெண் பதிவாளராக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.