இன்று முதல் பார்சல் ஒன்லி: ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிப்பு!

Published:

madurai shop crowd - 2026

மதுரை: கொரோனா காட்டுத் தீயாக பரவி வருகின்ற இன்றைய சூழ் நிலையில், நமது தொழிலாளர்களையும், வாடிக்கையாளர் களையும் காப்பது நம்முடைய கடமை ஆகிறது.

ஆகவே இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை மதுரை மாவட்ட உணவகங்களில் பார்சல்களை மட்டுமே வழங்குவது என்ற ஒரு முடிவை எடுப்பது சிறந்தது என்ற பெரும்பாலானவர் களின் வேண்டுகோளை ஏற்று அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கிறோம்.

இது நம்முடைய வாடிக்கையாளர்களையும் உழைப்பாளர் களையும் குடும்பத்தினரையும் மட்டும் காப்பாற்றுகின்ற பொறுப்பல்ல சமூகத்தை காப்பாற்றுகின்ற பொறுப்பும் நமக்கு இருக்கிறது ஆகையினால் நாம் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்றார் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் உணவகங்களில் நாளை முதல் பார்சலில் மட்டுமே உணவு விற்கப்படும் – தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 30ம் தேதி வரை பார்சலில் மட்டும் உணவு விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

  • ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity

Related articles

Recent articles

spot_img