ஈஸியா உடனே செய்ய, குட்டீஸ்க்கு பிடித்த ப்ரெட் வடை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
bread vada

சுவையான பிரெட் வடை ரெசிபி
தேவையான பொருட்கள் :

பிரெட் ஸ்லைஸ் – 10

ரவை – 5 டீஸ்பூன்

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில், பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்து, பிரெட்டை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பிறகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பௌலில், பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் சூடானதும் மாவை எடுத்து வடை போன்று தட்டி பொரித்தெடுக்கவும். சுவையான பிரெட் வடை ரெடி..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.