
கணவன் மனைவி தகராறு பிள்ளைகளின் உயிரை காவு வாங்கியுள்ளது. அடித்த கணவனை பழிவாங்க பிள்ளைகளை மண்டையில் பீர் பாட்டிலால் அடித்து கொன்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சித்திப்பேட் நகரைச் சேர்ந்தவர் தம்பதி சித்யாலா பாஸ்கர். பாஸ்கர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இரண்டு மனைவிகள் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவகரத்து செய்து விட்டு சரோஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் சரோஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வார்களாம்.
ஆனாலும் அவ்வப்போது சமாதானம் ஆகி விடுவார்கள்.
இந்த தம்பதியனருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். மூத்த மகனுக்கு 5 வயது, இரண்டாவது மகனுக்கு இரண்டரை வயது. சில தினங்களுக்க முன்பு பாஸ்கருக்கும் சரோஜாவிற்கு இடையே வழக்கம்போல சண்டை ஆரம்பமானது இதில் பாஸ்கர் சரோஜாவிடம் சண்டை போட்டுக்கொண்டு வேலைக்கு சென்று விட்டார். .
இதனால் கடும் கோபம் அடைந்த சரோஜா கணவன் வேலைக்கு போன நேரத்தில் பீர் வாங்கிக்கொண்டு வந்து குடித்தார்.
போதை தலைக்கு ஏறவே, கணவனை பழிவாங்க திட்டமிட்டார்.
இதற்காக அவர் கண்ணில் பட்டது குழந்தைகள்தான். பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களின் வாயில் துணியை அடைத்தார்.
கைகளையும் கட்டினார். டிவியின் சத்தத்தை அதிகமாக்கினார். குழந்தைகள் கதற கதற அவர்களின் தலையில் பீர் பாட்டிலால் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் குழந்தைகள் ரத்தம் வழிய மயங்கி விழுந்தனர். தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்ட சரோஜா போதை தெளிந்த உடன் மனதை மாற்றிக்கொண்டு அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
சரோஜாவை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் வேலை முடிந்த வீட்டிற்கு வந்த பாஸ்கர் உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் கட்டிலில் சடலமாக கிடந்தனர்.
அதிர்ச்சியடைந்த பாஸ்கர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறில் பெற்ற தாயே குழந்தைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



