Homeஉள்ளூர் செய்திகள்நீங்க என்ன சாதீ? செய்தியாளரிடம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!

நீங்க என்ன சாதீ? செய்தியாளரிடம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!

krishnasami interview - Dhinasari Tamil

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று ஒரு பிரச்னையைக் கிளப்பினார். பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து நீங்க எந்த ஊரு எந்த சாதி என்றெல்லாம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்தியது கண்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக., கூட்டணியில் இடம்பெற்று தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தனுஷ்குமாரிடம் தோல்வியைத் தழுவினார் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் `எனக்காக வாக்கு  சேகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், சரத்குமார், பிரேமலதா ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. பியூஷ் கோயல் நேரடியாக வந்து தொகுதியில் எனக்காக பிரசாரம் செய்தார். தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் நன்றி.

வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது என பாமக., தேமுதிக., உள்ளிட்ட கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

தென்காசியில் நான் எதிர்ப்புகள் பலவற்றைச் சந்தித்தேன். ஆயினும், உயர் வகுப்பினர், முன்னேறிய சமூகத்தினர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தென்காசியில் ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிராமணர்கள், முதலியார்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட சமூக மக்கள் தேர்தல் நேரத்தில் வரவேற்பு கொடுத்ததுடன்,  வாக்குகளையும் அளித்துள்ளனர். இது வரும் நாளில் சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

புதிய தமிழகம் கட்சி சார்பாக ஒராண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளேன். ஒரு புதிய சகாப்தத்தை 2021இல் புதிய தமிழகம் படைக்கும். இனி வரும் இரு ஆண்டுகளும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை நிம்மதியாக ஆட்சி செய்யவிட வேண்டும்” என்று பேசினார்.

இதனிடையே, செய்தியாளர் ஒருவர், `தென்காசி மக்கள் புதிய தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணிக்க காரணம் என்ன?’ என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணசாமி, `தோல்வியாக நீங்கள் பார்ப்பதை, நான் வெற்றியாகப் பார்க்கிறேன். பிரிந்து கிடந்த சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் பணியை தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் செய்துள்ளேன். இது சமூக மாற்றம். அனைத்து சமுதாய மக்கள் இருக்கும் இடத்தில் எங்களால் வாக்கு கேட்க முடிந்தது என்றால், அது சமூகப் புரட்சிதான்.

ஜல்லிக்கட்டு தொடங்கி கஜா புயல் வரையிலும் மோடி எதிராக செயல்படுகிறார் என ஒரு மாயைதான் இந்தக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம். தமிழக மக்கள் உணர்ச்சிக்கு இரையாகி இருக்கிறார்கள். அவர்கள்யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பிம்பமே தோல்விக்குக் காரணம். மோடி செய்த நல்லதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தாரே, அதற்கு ஏன் மக்கள் நன்றி செலுத்தவில்லை?”  என்று கேள்வி கேட்டார்.

இதனிடையே, ஏதோ வாக்குவாதம் ஏற்பட,  செய்தியாளர்கள் பலரும் ஒரே நேரத்தில் பேச அங்கே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கடுப்பான கிருஷ்ணசாமி, திடீரென தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை ஒருமையில், `நீ எந்த ஊரு, எந்த சாதி… உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’ என்றார்.

இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட, செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். திடீரென செய்தியாளரைப் பார்த்து சாதி என்ன என்று கேட்டது செய்தியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,153FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,521FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

1 COMMENT

  1. டாக்டருக்கு இப்போது தேவை வைத்தியம். இன்னமும் ஜாதி என்ற காரணியை தன்னகத்தே வைத்துள்ளாரே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...