வேலூரில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த ஆந்திராவை சேர்ந்த 15 பேரை அரசு அதிகாரிகள் மீட்டனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் கிராமத்தில் பசுபதி என்பவருக்கு சொந்தமான சாரதா ரைஸ் மில் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொத்தடிமைகளா வேலை பார்ப்பதாக காட்பாடி வட்டாச்சியருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து காட்பாடி வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதில் ஆந்திர மாநிலம் செதில்பாக்கத்தை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் ஆறு பேரும், கேபிஆர் புரம் ராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும், சுரேஷ் குடும்பத்தினர் மூன்று குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ரூ.50 ஆயிரத்துக்கு, கடந்த 4 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை மீட்ட வட்டாச்சியர் கோட்டாட்சியரிடம் மெக்ராஜிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து மூன்று குடும்பங்களை சேர்நத 15 பேரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கொத்தடிமைகளை வைத்திருந்த அரிசி ஆலை அதிபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கரும்பு ஆலை, சர்க்கரை ஆலை, அரிசி ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலைகளில் வறுமையின் காரணமாக கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் இங்கு வருடகணக்கில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருகின்றனர்.
ஏதேனும் பகுதியில் இதேபோல் கொத்தடிமைகள் பணியாற்றுவது தெரிந்தால், உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து கொத்தடிமைகளை மீட்ட அரசு அதிகாரிகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனா்.



