புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கி ஆபாச பேச்சு! இன்ஸ்பெக்டர் கட்டாய ஓய்வு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
cell phone

இன்ஸ்பெக்டராக இருந்தவர் மணிவண்ணன், 51. தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், இதற்கு முன் பெரம்பலூரில் இன்ஸ்பெக்டராக இருந்தார்.

இவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் புகார்களை சரியாக விசாரிப்பதில்லை, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முறையான புலன் விசாரணை செய்யாமல் இருந்ததாக புகார்கள் உள்ளது.

மேலும், பெரம்பலூரில் வேலை பார்த்தபோது, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் மொபைல் எண் வாங்கி, அவரிடம் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்ததாக, திருச்சி ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆகியோருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, மணிவண்ணன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க, அண்மையில் பணியிட மாறுதல் பெற்ற டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து, அவர் நேற்று முன்தினம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம், திருச்சி மாவட்ட லஞ்சம் வாங்கும் போலீசார் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.