December 6, 2025, 5:46 AM
24.9 C
Chennai

மாலை நேர செய்திகள்: செய்தி சுருக்கம்

 *டெல்லியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் தந்தி டி.வி.க்கு தேசிய விருது வழங்கபட்டது* தந்தி டி.விக்கு வாழ்த்துக்கள்.விஸ்வரூபம்*
♈??   *பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண எம்.பி நுஸ்ரத் சஹார் அப்பாஸி, பாராளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்*
♈??   *எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்*
♈??   *கம்பளா போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல்*
♈??   *தமிழகத்தில் சிலரால் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்படுகிறது – பாரதீய ஜனதா குற்றச்சாட்டு*
♈??   *சோமாலிய தலைநகரில் உள்ள ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்:7 பேர் பலி*
♈??   *பீட்டாவின் புகார் மனுவுக்கு நடவடிக்கை எடுத்த ஆளுநர் கிரண் பேடி உடனடியாக மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கிரண் பேடிக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக புதுச்செரி ஆளுநர் கிரண் பேடி செயல்படுவதால் மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்*
♈??   *சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவையில் சேர்வதற்கு ரூ. 500 விண்ணப்பம் வழங்கப்படுவதாக வெளியான தகவல்கள் பொய்யானது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்*
♈??   *ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் வாகனங்கள் எரிக்கப்படும் வீடியோ ஒன்றை மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு பலர் கருத்துகள் தெரிவித்தனர். அதில் ஒருவர், என்னிடம் காவல்துறையினர் வாகனங்களுக்கு தீயிடும் ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. இதில் அரசியல் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.அதற்கு துணை ஆணையர் பாலகிருஷ்ணன், நான் இதை ஒத்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மெரீனாவில் நடந்த கலவரம் அரசியல் என்று எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அதை காவல்துறையினரே ஒப்புக்கொள்கிறார்கள்.அடிதடி கலவரத்தில் ஈடுப்பட்ட காவல்துறையினர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது*
♈??   *மாணவர்கள் குடிகாரர்கள்-வெளிநாட்டு மது வகைகளையும் விட்டுவிட்டு, இவர்கள் பழச்சாறு மற்றும் பழம், காய்கறிகளிலான smoothies சாப்பிட வேண்டும் என கூறியுள்ளார் ஆர்யா. மேலோட்டமாக பார்த்தால் ஆர்யா ஏதோ நல்லது சொல்ல வருவது போல இருக்கும் இந்த டிவிட்டர் பதிவு, தமிழ் இளைஞர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்று சித்தரிப்பதை போல உள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரும் யுக புரட்சியை நடத்தி காட்டிய நிலையில், கல்லூரி சர்க்குலரை காண்பித்து, 'இவர்கள்' வெளிநாட்டு மதுபானத்தை தவிர்க்கலாம் என கூறியுள்ளார் ஆர்யா. அப்படியானால், இவர்கள் என அழைக்கப்படும் கல்லூரி மாணவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் என்பதே இவரது கருத்து. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் புரட்சியை ஏதோ குடிபோதையில் நடந்துள்ளதை போல வர்ணித்துள்ளார் ஆர்யா என்ற சந்தேகம் எழுகிறது*
♈??   *ஜல்லிக்கட்டுக்கு முதன் முதலாக தடை விதித்த நீதிபதி பானுமதியை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமையன்று தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது. கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில் இருந்து விலகியது போல நீதிபதி பானுமதி இம்முறையும் விலகுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகின. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டன*
♈??   *ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய தீ வைப்பு சம்பவத்தில் 31 இருசக்கரவாகனங்கள் சேதம் அடைந்துள்ளது என்று துணை ஆணையர் சுதாகர் கூறியுள்ளார். ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில்  விசாரணை நடத்தியதாக காவல்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்*
♈??   *புதுக்கோட்டையில் டுவீலர் மீது கார் மோதல்: 2 பேர் பலி*
♈??   * டில்லி வந்த அபுதாபி இளவரசர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்*
♈??   *மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு*
♈??   *தமிழகத்தில் நடத்தப்பட்ட வறட்சி பாதிப்பு குறித்த அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குன்னத்தூரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு உறுப்பினர் விஜயராஜ் மோகன் கூறியுள்ளார். மேலும் வறட்சி பாதித்த பகுதிகளில் அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்தப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்*
♈??   *ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2009-ல் திமுக கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்தை குறை கூற பொன். ராதாகிருஷ்ணனுக்கு தகுதியில்லை என்று கூறியுள்ளார். தமிழ் கலாசாரத்திற்காக போராடி பெற்ற வெற்றியை கேலி செய்வதற்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்*
♈??   *ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்டாமலு என்ற இடத்தில் கைப்பற்றப்பட்ட குண்டை வெடி குண்டு நிபுணர்கள் பாதுகாப்பான இடத்தில் வெடிக்க செய்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது*
♈??   *தமக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது தமிழகத்திற்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என மாரியப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு மத்திய அரசு இன்று பத்மஸ்ரீ விருது அறிவித்ததது. இதுகுறித்து மாரியப்பன் கூறியுள்ளதாவது: வெளியில் தெரியாத வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது உத்வேகமாக அமையும். மேலும் பத்மஸ்ரீ விருது கிடைக்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி எனவும் மாரியப்பன் தெரிவித்தார்*
♈??   *மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்ந்து 27,708 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 127 புள்ளிகள் உயர்ந்து 8,603 புள்ளிகளாக உள்ளது*
♈??   *உத்தரகாண்ட் மாநிலம் பஸ்பூர் என்ற இடத்தில் இரண்டு பாஜக குழுக்களிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர் எஸ்பால் ஆர்யா பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது*
♈??  *ராய்ச்சூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 கால்கள், 2 ஆண் உறுப்புடன் வினோத குழந்தை பிறந்துள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்த லலிதம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்தது.இதையடுத்து, லலிதம்மாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக்ஷாவின் அறிவுரைப்படி, அந்தக் குழந்தை பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (விஐஎம்எஸ்) கொண்டு செல்லப்பட்டது.தற்போது குழந்தைக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தனது மூத்த குழந்தை நலமாக இருக்கிறது. தற்போது பிறந்துள்ள குழந்தை எப்படி இருக்கிறதோ அதுபோன்றே வளரட்டும் தங்களால் குழந்தையின் உயர் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியாது என்றும் லலிதம்மா கூறியுள்ளார்*
♈??  *ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காவல் அதிகாரி : தள்ளி விடும் மர்ம நபர் யார்? : அதிர்ச்சி வீடியோ.கடந்த திங்கட்கிழமை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், ஆயுதப்படை பிரிவை சேர்ந்த காவலர் சங்கர் என்பவர் மாடு முட்டி மரணம் அடைந்தார். இந்நிலையில், அவருக்கு பின்னால் நிற்கும் ஒரு மர்ம நபர், அவரை மாட்டை நோக்கி தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்குவார்கள் எனத் தெரிகிறது*
♈??  *இசையமைப்பாளர் அனிருத் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்றிருக்கும் அவர், தனது ரசிகை ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் எனவும் செய்திகள் பரப்பப்பட்டது. ஒல்லியான தேகத்தில், அவரைப் போலவே இருந்தாலும், அது அவர்தானா என்பது தெரியவில்லை.அது அவர் இல்லை எனவும், இது போன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலு, அது அவர்தான் என சத்தியம் செய்யும் நெட்டிசன்கள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள்.ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பின் வாங்கி விட்டதாக இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பற்றி சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதை திசை திருப்பவே, அனிருத் என்ற பெயரில் இந்த வீடியோவை யாரோ பதிவு செய்துள்ளார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்*
♈??  *சாலையில் சென்ற வாகனம் தீடிரென தூக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ!!சீனாவில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று தூக்கப்பட்டு பின்னர் கீழே விழுந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் முக்கிய சாலை ஒன்றில் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது சாலையை கடப்பதற்காக ஒருவர் காத்துக்கொண்டிருந்தார்.அவர் கடந்து செல்வதற்காக, அந்த சாலை வழியே வந்த சில வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் ஒரு வாகனம் மட்டும் நிறுத்தாமல் சாலை கடக்காமல் சென்ற போது திடீரென்று அந்த காரின் பின்பக்கம் தூக்கப்பட்டு, அதன் அருகே இருந்த கார் மீது சென்று மோதியது. இதில் அந்த வாகனத்தின் டயர்கள் பாதிப்புக்குள்ளாகின.இந்த வீடியோவைக் கண்ட ஒரு சிலர் இது ஒரு அமானுச சக்தி என்று கூறிவந்தனர். வாகனம் தூக்கப்பட்ட அந்த இடத்தில் தொலைப்பேசி கம்பங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதில் காயில் ஒன்று சாலையின் மேல் கிடந்துள்ளது. இதன் விளைவாகவே வாகனம் தூக்கப்பட்டு, பின்னர் வீசப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது சீன அரசு*
♈??    *10 நிமிடங்களில் 2.5 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி, புதிய சாதனை படைத்துள்ளது. சியாமி நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதையடுத்து இதை நேற்று ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் விலை ரூ.9,999 முதல் ஆரம்பமாகிறது.10 நிமிடங்களில் 2,50,000 ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன்கள் விற்று, முந்தைய ‘ரெட்மி நோட் 3’ விற்பனை சாதனையை முறியடித்துள்ளது. ’ரெட் மி நோட் 4’ செல்போனில் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை சேர்த்துள்ளது.’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன் Rs 9999 (2GB RAM + 32GB Flash), Rs 10,999 (3GB RAM + 32GB Flash) மற்றும் Rs 12,999 (4GB RAM + 64GB Flash) ஆகிய வகைகளில் கிடைக்கிறது*
♈??  *த்ரிஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட தொழிலதிபர் வருண் மணியன் தற்போது த்ரிஷா இல்லைனா பிந்து மாதவி என்று தற்போது பிந்து மாதவியோடு பிஸியாக உள்ளார்*
♈??  *படம் முடியப் போகிறது. இருந்தும், படப்பெயரை இன்னும் அறிவிக்காததால், தல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.அஜித், கஜோல், அக்ஷரா நடித்துவரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. அனிருத்  இந்தப் படத்துக்கு இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விரைவாக முடித்து ஜுன் 23 ரம்ஜான் தினத்தில் திரையிட தயாரிப்பு தரப்பு முடிவு  செய்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அது ரம்ஜான் விருந்தாக  அமையும்*
♈??  *சினிமா திரைப்பட புரமோஷனுக்கு ஹீரோயின்கள் கலந்துகொள்ளாதது பற்றி அடிக்கடி பேசப்பட்டவர் நயன்தாரா, சமீபத்தில்  படத்தின் புரமோஷனுக்கு ஹீரோயின்கள் வந்துவிட்டால் மட்டும் மோசமான படத்தை ஓடவைக்க முடியுமா? என நடிகை  நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார்*
♈??  *நாமக்கல்: அரிய வகை மூலிகை கிழங்கை வெட்டி கடத்திய 6 பேர் கைது*
News… Viswaroopam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories