
ஒரு மூடன் தன் அழகை காண கண்ணாடியில் முகத்தை பார்த்தான். அவனது முகம் அதில் துல்லியமாக பிரதிபலித்தது.
தன் முகம் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருப்பதாக அவன் உணர்ந்தான் அதற்குக் காரணம் என்ன என்று சிந்தித்தான் கண்ணாடியில் தெரியும் பிரதி பிம்ப முகமானது திலகம் கூட இல்லாமல் பாழ் நெற்றியாக இருப்பதுதான் இதற்கு காரணம் என்று முடிவுக்கு வந்தான்
தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணத்தில் கண்ணாடியில் தோன்றிய முகத்திற்கு குங்குமம் வைத்தான் அப்படி குங்குமம் வைக்கும் போது அவன் தலை சிறிது அசைந்து அதனால் குங்குமம் வைத்த இடம் நெற்றியை விட்டு தள்ளிச் சென்றது.

உடனே பிரதி பிம்ப நெற்றியில் இருந்த குங்குமத்தை சரி செய்வதற்கு முயன்றான் மீண்டும் அவன் தோல்வியைத்தான் அடைந்தான் இப்படி அவன் மீண்டும் மீண்டும் செய்ய அவனுக்கு தோல்வியே கிடைத்தது. ஒவ்வொரு முறையும் அவனது முகத்தில் சரியான படி அந்த குங்குமம் அமையவில்லை.
தோல்வியடைந்த பிறகு பிரதி பிம்பத்தையே நேரடியாக அழகுபடுத்த முடியாது என்பது அவனுக்குப் புரிந்தது குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் இட்டுக்கொண்டால் கண்ணாடியில் பிரதிபலித்த முகத்திலும் அவன் நினைத்தவாறு சரியான இடத்தில் குங்குமம் பிரகாசித்தது இப்பொழுது அவன் முகம் அழகாக இருப்பதை கண்டு மகிழ்ந்தான்.
கண்ணாடியில் தெரியும் தன் பிரதி பிம்பத்தைப் அழகை சீர்செய்வதற்கு தன் முகத்தை அவன் அலங்கரித்துக் கொள்ள வேண்டியிருந்தது அதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் இறைவனைப் பூஜிக்க வேண்டும் நம் சாஸ்திரங்களில் கூறப்பட்டவாறு இறைவனுக்கும் ஜீவனுக்கும், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும் என்ன சம்பந்தம் முறையே முகத்திற்கும் அது பிரதிபலிக்கும் பிம்பத்திற்கும் உள்ள சம்பந்தம்

மனம் ஜீவனின் ஒரு வேலைக்காரன் எஜமானனை சந்தோசப்படுத்துவதே ஒரு வேலைக்காரனின் கடமையாகும் மனம் தன் எஜமானனான ஜீவனை எப்படி சந்தோஷப்படுத்துகிறது அது நேரடியாக தனது பிரபுவான ஜீவனை திருப்திப்படுத்துவதில் ஈடுபட்டதேயானால் அந்த முயற்சிகள் யாவும் வீணாவது உறுதி அந்த மூடன் நேரடியாக பிம்பத்தை அழகு படுத்த முயல்வது போலாகும்.
இதற்கு மாறாக ஜீவனின் உண்மை நிலையான இறைவனை வழிபட்டால் தான் அதனுடைய எஜமானனான ஜீவன் சந்தோஷம் அடையும். இறைவனை நாம் திருப்தி அடைய செய்தோமேயானால் அழகு புகழ் செல்வம் மனதிருப்தி அமைதி நிம்மதி என யாவும் அருகில் இருக்கும் மனம் சதா சந்தோஷத்தில் திளைக்கும் மற்றவை அர்த்தமற்றவை ஆகும் நித்தியஸ்ரூபன் நித்தியமாய் நிலைத்து நிலையான திருப்தி நல்கும்.
இந்த உயர்ந்த கருத்தை ஆதி சங்கர பகவத்பாதாள் நரசிம்ம பகவானை மேல் இயற்றிய ஒரு சுலோகத்தில் அழகாக எடுத்துரைத்துள்ளார்.



